அரசு பஸ் மோதி வாலிபர் பலி
உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், சிக்கபூவத்தி அருகே மிட்டப்பள்ளி கிரா-மத்தை சேர்ந்தவர் சந்திரன் மகன் சங்கர், 21. பேக்கரியில் வேலை செய்து வந்தார்; நேற்று முன்தினம் மாலை, 4:15 மணிக்கு, ராயக்-கோட்டை - ஓசூர் சாலையில் உள்ள அகரம் பகுதியில், டி.வி.எஸ்., பைக்கில் சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ், பைக்கின் பின்னால் மோதியது. இதில் படுகாயமடைந்த சங்கர், ஓசூர் அரசு மருத்துவ-மனை செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்திற்கு காரணமான, தர்மபுரி மாவட்டம், அனசாகரம் பகுதியை சேர்ந்த அரசு புஸ் டிரைவர் கதிரவன், 54, என்பவர் மீது, உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.ரூ.45 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
அரூர், ஏப். 16
அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தையில், 45 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 230 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 47,000 முதல், 69,000 ரூபாய் வரை விற்பனையானது. அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 8,000 முதல், 34,000 ரூபாய் வரை விற்ப-னையானது. நேற்று நடந்த சந்தையில், 45 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை