தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
சிதம்பரம்: சிதம்பரம் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வாயிலில், 10 ஆயிரம் ரூபாய் கீழே கிடந்ததாக, அண்ணாமலை பல்கலையில் வாட்டர் சப்ளையராக பணியாற்றி வரும் சந்திரபாண்டியன் மற்றும் செக்யூரிட்டி சங்கர் ஆகியோர் பணத்தை போலீசில் ஒப்படைத்தார். அதனையடுத்து, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தவறி விட்ட 10 ஆயிரம் பணத்தின் புடைப்படத்துடன் அனைத்து வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வளைதளத்தில் பதிவிட்டு, தவற விட்டவர்கள் பெற்றுக்கொள்ள கோரினார்.
இந்நிலையில், நேற்று பணத்தை தவற விட்ட, காட்டுமன்னார்கோவில் அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் சாமிநாதன் என்பவர், போஸ் நிலையத்ததை அணுகி, தொலைந்த பணம் தன்னுடையது என தெரிவித்தார். மருத்துவமனையின், விபத்துக்குள்ளான தனது மகனை சேர்த்துவிட்டு, அங்கே தங்கியிருந்தபோது டீ சாப்பிட வெளியில் வந்தபோது பணத்தை தவறவிட்டதாக தெரிவித்தார்.
அதையடுத்து, போலீசார் விசாரணைக்கு பின்பு , நேற்று அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை