குடகனாற்றில் நீர்வரத்து :சுயே., வேட்பாளர் உறுதி

வேடசந்துார்:குடகனாற்றில் பழைய நிலையை உருவாக்கி நீர் வரத்தை உறுதி செய்வதே முதல் பணியாக இருக்கும் என வேடசந்துார் தொகுதி சுயே., வேட்பாளர் என்.எஸ். மணிகண்டபிரபு கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: பணம் இல்லாமல் ஒரு மாணவனின் கனவு கூட நின்றுபோக விடமாட்டேன். அவர்களின் கல்வி என் பொறுப்பாக இருக்கும். குடிநீர் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும். உள்ளூரிலே தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு ஈடாக தரம் உயர்த்தப்படும். அனைத்து கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். குடகானற்றின் பழைய நிலையை மீட்டு நீர் வரத்தை உறுதி செய்யப்படும் என்றார்.

Advertisement