மக்கள் எனும் நீதிபதிகள் தான் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்;- சீனிவாசன் உருக்கம்
திண்டுக்கல்:''மக்கள் எனும் நீதிபதிகள் தான் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்'' என திண்டுக்கல் அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் காந்தி மார்கெட் சுற்றுப்பகுதிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்த வேட்பாளர் சீனிவாசன் பேசியதாவது: இங்கு மும்மதத்தவர்களும் உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் கிலோ ரூ.30 விற்ற அரிசி, இன்று ரூ.70க்கு விற்கிறது. கட்டடம், சொத்து, குப்பை, வணிகம் என அனைத்து வரிகளும் உயர்ந்து விட்டது. இந்த நிலைமைக்கு நீங்களும் நானும் காரணம் அல்ல. ஆளும் அரசாங்கமே பொறுப்பு. அ.தி.மு.க.,வினர், உங்களுள் ஒருவராக இருப்பதால்தான் இன்றும் மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோம்.கடந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே 2 லட்சம் ஓட்டுக்கள்தான் வித்தியாசம். 42 எம்.எல்.ஏ.,க்கள் 500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றதால் தான் ஆட்சி பறிபோனது. ஆனால் தி.மு.க.,வின் மோசமான நிர்வாக திறமையால் விலைவாசி குறையவில்லை. அடிக்கடி மின்வெட்டு நடக்கிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்கள் போற்றும் வகையில் நாங்கள் ஆட்சி நடத்துவோம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. ,அமைச்சர் பெரியசாமி, தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார் உள்பட அவர்கள் குடும்பத்தினர் அனைவரின்மீதும் வழக்கு உள்ளது. இவரை போல் 13 அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது.மக்களிடம் ஓட்டு கேட்பவர்கள் நியாயமாகவும், கறைப்படாத கரங்களுக்கு சொந்தக்காரராகவும் இருக்க வேண்டும். நீதிபதிகளாக இருக்கும் நீங்கள் இந்த தேர்தல் மூலமாக நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் . திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் அம்மா உணவகம் அமைத்து தரப்படும் என்றார்.
மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்