வேட்பாளர் சீனிவாசன் மீது வழக்கு

திண்டுக்கல்:திண்டுக்கல் அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் கோடாங்கிநாயக்கன்பட்டியில் பிரசாரம் செய்தபோது அந்த ஊரில் பெருபான்மையாக ஜாதியின் பெயரை குறிப்பிட்ட பேசியதுடன் தமிழகத்தை ஆளப்போவதும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்றும் பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க.,வேட்பாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டதாக திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டை சேர்ந்த வேல்முருகன் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement