வரும் 23ல் சம்பளத்துடன் விடுமுறை ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பளிக்க உத்தரவு
ஈரோடு :ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி, செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கடை, நிறுவனங்கள், ஆலைகளும், அனைத்து வகை தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் ஓட்டுரிமையை செலுத்த சம்பளத்துடன் விடுப்பு வழங்கிட வேண்டும்.
இதுபற்றிய புகார்களை தொழிலாளர்கள், தொழிலாளர் துறை அலுவலகம்: 0424 2270090, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர்கள் (சமரசம்) திருநந்தன்: 92458 28711, (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி: 94453 98751, துணை ஆய்வாளர் என் அனுராதா: 94427 26113 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவியை கொன்ற கணவர் ஓட்டம் நியாயம் கேட்டு பெற்றோர் புகார்
-
இன்று இனிதாக... (19.04.2026) பெங்களூரு
-
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை
-
டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி
-
திருச்சியில் இன்று விஜய் 'ரோடு ஷோ' கடலுாரில் 3வது முறையாக ரத்து
-
உங்கள் பணத்தை உங்களுக்கே தருவது திட்டமா?
Advertisement
Advertisement