டிராக்டர் கவிழ்ந்து இரண்டு பேர் பலி
தங்கவயல்: கேசம்பள்ளி அருகே பீர்னகுப்பா என்ற கிராமத்தில், டிராக்டர் ஓட்டும் பயிற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் இருவர் இறந்தனர்.
கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பீர்னகுப்பா என்ற கிராமத்தில் தர்ஷன் ரெட்டி, 18. லட்சுமி நாராயணா,18, என்ற இருவர் டிராக்டர் ஓட்டுவதற்கு பயிற்சி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டர் திடீரென்று கவிழ்ந்தது. இதில், தர்ஷன் ரெட்டி, லட்சுமி நாராயணா ஆகிய இருவருமே டிராக்டரின் அடியில் சிக்கினர். இருவருக்கும் தலை, கால், உட்பட உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து கேசம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்
Advertisement
Advertisement