மயிலை வேலுவிற்கு ஆதரவாக கனிமொழி தீவிர பிரசாரம்
சென்னை: மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வேலுவிற்கு ஆதரவாக, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பிரசாரம் செய்தார்.
மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வேலுவை ஆதரித்து, தி.மு.க., துணை பொதுச் செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி நேற்று மாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட தொதியின் பல பகுதிகளில், திறந்த வேனில் சென்று, வீதிவீதியாக பிரசாரம் செய்தார்.
நேற்று காலை, கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் வேலு, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
மூன்று மணி நேர பிரசாரத்தின்போது, அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின்போது, வேலு கூறியதாவது:
சீனிவாபுரத்தில், 2,500 - 3,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள், தற்போது வசித்து வரும் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அவற்றை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்பு கட்டித் தரப்படும்.
முன்னதாக, கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, கட்டட வரைப்படம் தயாரிக்கும் நிலையில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் யாரும் அகற்றப்படமாட்டார்கள். அவரவர் தற்போது வசிக்கும்படியே, புதிதாக வீடு கட்டிய பின் அதே குடியிருப்பில் வசிப்பர்.
கட்டுமான பணி நடைபெறும் காலக்கட்டங்கள் வரை, அவர்களுக்கென வாடகை தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆட்சி மாறினால் காட்சியும் மாறும்; அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை
-
முதல்வர் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு: பிரேமலதா பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி
-
இளைஞர்களைக் கவர பிள்ளைகளை பிரசாரத்தில் இறக்கும் வேட்பாளர்கள்: அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் ‛‛ரெடி''
-
குடும்ப அரசியல் வீழ 2026 தேர்தல் முடிவு முக்கியம்: அண்ணாமலை
-
பார்லியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை