கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில், ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தபோது, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 2020ல், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே, 'கன்டெய்னர்' லாரியில் கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மதுரை மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள், வேதாரண்யம் அருகே, ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடை வீதியில் சென்ற கன்டெய்னர் லாரியை மடக்கி, சோதனை செய்தனர்.
அதில், 310 மூட்டைகளில், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டு இருந்ததும், அதில், 620 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது; இதன் மதிப்பு, 3.20 கோடி ரூபாய்.
தொடர் விசாரணையில், வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 54; கோடியக்காடு கூட்டுப்பள்ளி தெருவைச் சேர்ந்த அய்யப்பன், 35; கோடியக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த பரமானந்தம், 35; சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரமணன், 45; தவமணி, 37 ஆகியோர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், கடத்தலுக்கு பின்னணியில், ராமதாஸ் என்ற கருத்தப்பாண்டி, 45, என்பவர் இருப்பதும் தெரியவந்தது.
இவர் வகுத்து தந்த திட்டத்தின்படி, செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா மூட்டைகளை ஏற்றி வந்து, கோடியக்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, செல்வராஜ், அய்யப்பன் உள்ளிட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். கருத்தப்பாண்டியை ஆறு ஆண்டுகளாக, என்.சி.பி., அதிகாரிகள் தேடி வந்தனர். இவர், சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து, இரு தினங்களுக்கு முன், திருச்சி வந்த கருத்தப்பாண்டியை, அங்குள்ள விமான நிலையத்தில், என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.
மெத் ஜாபர் சாதிக்கும்... அமீரும் ottu போட்டுட்டாங்களாபமேலும்
-
ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'
-
கடிகார முள்ளோடு ஒரு 'வாக்கு' யுத்தம்
-
காலம் கடந்து கொண்டிருக்கிறது; ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
-
ஓட்டு போடாத செந்தில் பாலாஜி; கோவையிலேயே ஐக்கியம்
-
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு எப்போது அதிகம்!