தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
சென்னை, ஏப். 23-
'தமிழகத்தில், வரும் 26 வரை வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை வானிலை ஆ ய்வு மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மரத்வாடா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா வழியாக, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிற பகுதிகளில், இன்று வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகத்தில் இன்று முதல் 26 வரை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் அதிக வளைவுகளால் விபத்து அச்சம்
-
சீமை கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
இதய நோய் பரிசோதனை முகாம்
-
வீதிதோறும் கேட்கிறது.. 'விசில்' சத்தம்! . தேர்தல் முடிந்ததால் மகிழ்ச்சி
-
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் தடையை மீறி பட்டாசு தயாரிப்பு
-
ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோமேட்டிக் டிக்கெட் இயந்திரம்