ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
சென்னை: திருவொற்றியூர் தொகுதி ஓட்டு மையங்களில் இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் இன்று துவங்கி நடந்து வருகிறது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அதிகாலையிலேயே தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் உள்ள ஓட்டு இயந்திரங்களில் திடீரென பழுது ஏற்பட்டது. பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி 163ல் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஓட்டுப்பதிவு தடைபட்lது. நீண்ட வரிசையில் நின்ற மக்கள் வாக்களிக்க முடியாததால், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அதேபோல,விருதுநகர் மாவட்டம் ராஜபவாளையம் சங்கபாண்டிபுரத்தில் 100வது ஓட்டுச்சாவடியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு தாமதமானது.
உத்தரமேரூ தொகுதிக்குட்பட்ட 22ம் எண் ஓட்டுச்சாவடியில் ஓட்டு இயந்திரம் பழுதால் ஓட்டுப்பதிவு தொடங்கப்படவில்லை. திருவொற்றியூர் தொகுதி ஓட்டு மையங்களில் 231,233ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை மேற்கு தொகுதி ஜெய்ஹிந்த் புரம் யாதவா மெட்ரிக் பள்ளி பூத் எண் 316ல் மின்னணு இயந்திர கோளாறால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், சிக்கல் சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இயந்திரத்தில் பதிவு செய்யப்படும் ஓட்டுகள் விவிபேட் இயந்திரத்தில் காட்டப்படாததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது ஓட்டுப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டதோடு, புதிதாக விவி பேட் இயந்திரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு ஏதுவாக விளக்குகள் எதுவும் அமைக்காததால் அதிகாரிகளுடன் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி பூத் எண் 86ல் ஓட்டுப்பதிவு இயந்திரம் இயங்காதால் ஓட்டுப்பதிவு தாமதம் அடைந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பிறகு, 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கப்பட்டது. சிவகங்கை புலிக்கண்மாய் கிராமத்தில் ஓட்டுப் பதிவு இயந்திரம் இயங்காததால் ஓட்டு பதிவு தாமதமடைந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் தொகுதி தொட்டபாவி கிராமத்தில் 162வது ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறு காரணமாக இன்னமும் வாக்குப்பதிவு துவங்கவில்லை. ராமேஸ்வரம் நகைக்கடை பஜாரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி நம்பர் 2ல் ஓட்டு இயந்திரம் பழுதானதால் 1 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரம் சரி செய்ததும் மீண்டும் ஓட்டு பதிவு துவங்கியது.
கொரட்டூரில் தபால் ஓட்டு கிடைக்காததால், அம்பத்தூர் தொகுதியில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சென்னை நன்மங்கலம் தாகூர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பூத்தில் 1 மணி நேரத்துக்கு மேல், வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், 8 மணிக்குத்தான் வாக்குபதிய முடிந்தது. வயதானோர் நீண்ட நேரம் நிற்க முடியாததால், அதிகாரிகள் உதவியால் வாக்களிக்க இயன்றது.மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு