மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
கரூர்: பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் பங்கேற்று விட்டு திரும்பிய ஏழு பேரை, மதுரை அருகே பெட்ரோல் குண்டு வீசி கொன்ற வழக்கில், குற்றவாளிகள் ஒன்பது பேருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த, 20 பேர், 2012 அக்., 31ல், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜை யில் பங்கேற்றனர். பின்னர், அங்கிருந்து சொந்த ஊருக்கு, 'டாடா சுமோ' காரில், திரும்பிக் கொண்டிருந்தனர்.
பெட்ரோல் குண்டு
அப்போது, மதுரை, அவனியாபுரம் ரிங் ரோடு பகுதியில் கார் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அதில், காரில் பயணம் செய்த புளியங்குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல், தேசிங்கு ராஜா, ஜெயபாண்டியன், சந்திர பாண்டியன், ரஞ்சித்குமார், விஷ்ணு பிரியன், சிவராமன் ஆகிய ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், 13 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த அவனியாபுரம் போலீசார், மதுரை, தேவகனி தெருவைச் சேர்ந்த ராமர் பாண்டி, மணிகண்டன், கார்த்திக், முத்து விஜி, சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்து கருப்பன், மோகன், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய 11 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், குற்றவாளிகள் தரப்பில் பாதுகாப்பு கருதி, வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதனால், வழக்கு விசாரணை, 2021ல் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், முத்து விஜி, மதுரையிலும், ராமர் பாண்டி, கரூர் அருகே அரவக்குறிச்சியிலும் கொலை செய்யப்பட்டனர்.
மீதியுள்ள ஒன்பது பேர் மீதான வழக்கு விசாரணை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்தாண்டு மார்ச் 23ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விபரங்களை மார்ச் 25ல் அறிவிப்பதாக தெரிவித்தது.
ஆனாலும், தண்டனை விபரங்கள் குறித்த அறிவிப்பு ஏப்., 6, 15 மற்றும் 21ல் வெளியிடப்படும் என கூறியும், நீதிபதி இளவழகன் மூன்று முறை தண்டனை விபரத்தை அறிவிக்காமல் ஒத்தி வைத்தார்.
அபராதம் விதிப்பு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஒன்பது பேருக்கும் தலா, ஏழு ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் முழுதும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதில், குற்றவாளிகள் மணிகண்டன், கார்த்திக் ஆகியோருக்கு, 33 லட்சத்து 91,400 ரூபாய் அபராதம், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்து கருப்பன் ஆகியோருக்கு, 33 லட்சத்து 92,400 ரூபாய், மோகன், விக்னேஷ் ஆகியோருக்கு, 33 லட்சத்து 92,400 ரூபாய், சந்தோஷுக்கு, 33 லட்சத்து 95,400 ரூபாய் வீதம் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
இதுபோன்ற கொடூர கொலைகளுக்கு மரணதண்டனை தான் சரி.மேலும்
-
எம்.சி.டி., மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் பா.ஜ., அறிவிப்பு
-
அருணா அசப் அலி மருத்துவமனையில் முதல்வர் ரேகா ஆய்வு
-
'மெமு' வகை பயணியர் ரயில்களில் 12 பெட்டிகளாக உயர்த்த கோரிக்கை
-
பழையசீவரத்தில் சுகாதார நிலையம் ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
-
மரத்தில் ஆணி அடித்து பதாகைகள் வைப்பதால் பட்டு போகும் பரிதாபம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
-
மாதிரி ஓட்டுச்சாவடியில் சிவப்பு கம்பள வரவேற்பு