மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுவேன் ஆத்துார் தொகுதி காங்., வேட்பாளர் பிரசாரம்
ஆத்துார்: ஆத்துார் தொகுதி, காங்., வேட்பாளர் அர்த்தனாரி, ஆத்துார் டவுன், நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், அப்பமசமுத்திரம் பகுதிகளில், கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தொகுதி மறுவரையறை எனும் பா.ஜ., அரசின் சதியை, தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஒன்றி-ணைந்து போராடி, தமிழக உரிமையை காப்பாற்றியுள்ளனர். பா.ஜ., அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம், காங்., - தி.மு.க., கூட்டணி கட்சிகள் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் அனைவரும் கறுப்பு கொடி ஏந்தியும், கறுப்பு சட்டை அணிந்தும் போராடினோம். இதில் வெற்றி கிடைத்ததும், கறுப்பு கொடிகளை இறக்கி, கறுப்பு சட்டையில் இருந்து வெள்ளை நிற ஆடைக்கு மாறிவிட்டோம்.தி.மு.க., - காங்., எப்போதுமே மாநில உரிமைக்கு போராடி வரு-கிறது. தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்ததும், இத்தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மக்களுக்கு பெற்றுத்தருவேன். தமிழக மக்களுக்கு போராடும் இயக்கமாக, தி.மு.க., கூட்டணியில் நாம் இடம் பெற்றுள்ளோம். எதிர் அணியான, அ.தி.மு.க., கட்சி, பா.ஜ.,வுடன் உள்ளது. எங்களுக்கு மாநில உரிமையை முக்கிய-மாக கருதுகிறோம். 2024 லோக்சபா தேர்தலை போன்று, அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, இரண்டாம் முறை ஆட்சி அமைக்கும். தி.மு.க., தேர்தல் அறிக்-கைகள், அனைத்து மக்களிடமும் சென்றுள்ளன. ஆத்துார் தொகுதி மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன் நின்று செயல்ப-டுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், தி.மு.க., - காங்., - வி.சி., - தே.மு.தி.க., - கொ.ம.தே.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்-டனர்.மகளிர், முதியோருக்கு ரூ.2,000 வழங்கப்படும்
சங்ககிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சுசங்ககிரி, ஏப். 20
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சங்ககிரி தொகுதியில் போட்-டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றிவேல், சங்ககிரி நகர பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஐந்து லாந்தர் கம்பம், சந்-தைப்பேட்டை, பால்வாய், கழுகுமேடு, அக்கமாபேட்டை, சத்யா நகர், டி.பி.ரோடு, பச்சைகாடு, நாட்டாம்பாளையம், தாமஸ் காலனி, நாகிசெட்டிப்பட்டி, கரிமேடு, கஸ்துாரிபட்டி, பொந்து கிணறு, பழைய இடைப்பாடி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்பட, 31 இடங்களில் நேற்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். வழியில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் துாவி வர-வேற்பு கொடுத்தனர்.
பிரசாரத்தின்போது வெற்றிவேல் பேசியதாவது:
சங்ககிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பொதுச்செயலர், இ.பி.எஸ்., தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், ஒவ்வொரு குடும்பத்துக்கும், 10,000 ரூபாய், ஆண்டுக்கு, 3 விலையில்லா காஸ் சிலிண்டர், முதியோர் ஓய்வூதியம், 2,000 ரூபாயாக உயர்த்-தப்படும். மகளிருக்கு மாதம், 2,000 ரூபாய் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு கட்டி கொடுக்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சார அளவு அதிகரித்து வழங்கப்படும். காவிரி ஆற்றின் உபரிநீர் திட்டத்தில் உள்ள, 100 ஏரிகளை தவிர்த்து சங்க-கிரி தொகுதியில் உள்ள மற்ற ஏரிகளும் சேர்க்கப்படும். அதனால் என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்-யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க., சங்ககிரி நகர செயலர் சங்கர், இணை செயலர் சக்தி-வேல்ராஜா, ஒன்றிய முன்னாள் செயலர்கள் மணி, ராஜா, நகர முன்னாள் செயலர் செல்லப்பன், பா.ம.க., நகர செயலர் ஐயப்பன், மாவட்ட துணை தலைவர் பழனிமுத்து, பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் ரமேஷ் கார்த்திக் உள்-ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஓட்டு சேகரித்தனர்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை