உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: உட்கட்டமைப்பில் உலகளவில் நம் நகரங்கள் உயர்ந்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் எளிதான முறையில் வீல் சேர் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டது குறித்து வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடக்கம்தான். 2030க்குள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைப்பாதை, மரங்கள் கொண்ட 'Complete Streets' உருவாக்கப்படும் என்பதை StalinStatement எனும் எனது 14 அம்சத் தொலைநோக்குத் திட்டத்தில் அறிவித்திருக்கிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உட்கட்டமைப்பில் உலகளவில் நம் நகரங்கள் உயரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
இன்னும் இருபது நாட்களில் சங்கிகளின் கொட்டம் அடங்கி விடும், பிறகு வழக்கம் போல அடுத்த ஐந்து ஆண்டுகள் புலம்பலாம்!
ஸ்டாலின் மஞ்சஉண்டு கருணாநிதி அளவிற்கு ஈக்கு போக்கு தெரியாததினால் மத்திய அரசுடன் எப்போதும் மோதல் போக்கு கடை பிடிப்பதால் ஆட்சியை நடத்த தெரியாமல் திணறுகிறார். திறமியினமை மற்றும் போதற்கு கட்சியின் மூத்தவர்களை தன் மகனுக்காக விரோதித்து கொள்கிறார். இம்முறை இதெல்லாம் அவருக்கு எதிர் விணையாற்றும்.
நீங்க வீல்சேர் காட்டினாலே அந்த போலி வெற்றி கப்பு கொடுத்து அப்பனையும் மவனையும் முட்டலாக்கி போனானே அவன்தான் நினைவுக்கு வருகிறான் , இந்தியாவின் எல்லா நகரங்களிலும் மெட்ரோ ரயில் முதல் தொலைதூர ரயில் வரை இருக்கும் இடங்களில்லெம் இது போன்று மத்திய அரசு உயர்த்தி விட்டது , நீங்க இப்போ ஸ்டிக்கர் ஓட்டுவதை பார்த்தால் டாஸ்மாக் தமிழனுக்கு வேண்டுமானால் புல்லரிக்கும் மறத்தமிழனுக்கு எரிச்சல் தான் வரும்
திராவிட மாடல் அரசின் அரசின் திட்டங்களில் கமிஷன் காரணமாக, தரமற்ற சாலைகள், தரமற்ற கட்டுமானங்கள், தரமற்ற கழிவு நீர் கால்வாய்கள், தரமற்ற பாதாள சாக்கடை திட்டம் போன்றவை நமது நகரங்களின் உட்கட்டமைப்பு அமைப்பை குறைத்து உள்ளதே தவிர, உயர்த்தி உள்ளதாக யாரும் முடியாது. ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத அரசின் உட்கட்டமைப்பு பணிகளின் அல்ல நிலையை, நாம் சென்னை மற்றும் தூத்துக்குடியில் 2023 ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நேரில் கண்டோமே.
திரும்ப திரும்ப பொய் சொல்லிட்டு இருந்த அது உண்மை ஆகிடும் என்று நம்பிகிறார் முதல்வர் காலக்கொடுமை
கோபாலபுரத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்திவிட்டதாக பெருமைபடுகிறார் ...பை பை நைனா
மதுரை சிறந்த உதாரணம் , உலகமே வியக்கிறது
அப்பா /அண்ணாவுக்கு 2026 ஊத்திக்கிச்சு
அல்ட்டிமேட் காமெடி முடியலடா சாமி இந்த ஆள் வாயிக்கு பூட்டு போடுங்கப்பா பை பை
வெளி மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தவுடனே ஒரு சாக்கடை நாத்தம் அடிக்கும் பாருங்க. ரயிலில் இரவில் நன்றாக தூங்குபவர்கள் கூட, அந்த சாக்கடை நாத்தத்தை சுவாசித்தவுடன், அடே எழுந்திருங்கப்பா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துவிட்டது என்று சரியாக எழுந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு நாற்றமாம். ஆனால் முதல்வர் இதையெல்லாம் மறைத்து உட்கட்டமைப்பில் உலகளவில் சென்னை உயரும் நகரம் என்று வாய்கூசாமல் பொய் பேசுவது தாங்கமுடியவில்லை.மேலும்
-
சேலத்தில் ஓட்டளித்தார் இபிஎஸ்; ஓட்டளிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான் பேட்டி
-
மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்; 152 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு
-
சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்; பஸ் வசதி இல்லாததால் போராட்டம்
-
ஓட்டுப்பதிவில் சாதனை நடக்கணும் : தமிழக மக்களுக்கு மோடி வேண்டுகோள்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு