வாழைத்தார், தேங்காய் ரூ.9.81 லட்சத்துக்கு ஏலம்

கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 38 ரூபாய்க்கும், நேந்திரன், 30 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 850, தேன்வாழை, 520, பூவன் மற்றும் ரஸ்த்தாளி, தலா 510 ரூபாய்க்கும், மொந்தன், 80 ரூபாய்க்கும், ரொபஸ்டா, 360, பச்சைநாடான், 380 ரூபாய்க்கும் விற்பனையானது.


வரத்தான, 4,300 வாழைத்தார்களும், எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 10 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை, வரத்தான, 9,990 தேங்காய்களும், 1.81 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement