ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அடிக்கல் நாட்டினார்.

பின், அவர் கூறியதாவது:

இன்று ஒடிஷாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த தொழிற்சாலை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு செமிகண்டக்டர் உற்பத்தியில் ஒடிஷாவை முக்கிய மையமாக மாற்றும்.

இந்த ஆலையானது, உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒடிஷாவுக்கு கொண்டு வரும்.

தற்போது தகவல் தொழில்நுட்ப மையமாகவும், மின்னணு உற்பத்தி மையமாகவும் ஒடிஷா உருவெடுத்து வருகிறது. இந்த தொழிற்சாலை சிப் பேக்கேஜிங் துறையில் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement