'ஏசி, மொபைல், பிரிஜ், டிவி ' விலை இம்மாத இறுதியில் உயர்கிறது
புதுடில்லி: 'ஏசி', பிரிஜ், வாஷிங் மெஷின், டிவி, மொபைல் போன்' ஆகியவற்றின் விலையை இம்மாத இறுதியில் உயர்த்த பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
கடந்த நான்கு மாதங்களில் இப்பொருட்களின் விலை உயர்த்தப்படுவது 3வது முறை ஆகும். மெமரி சிப், கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் முதலிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து, இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, பல்வேறு நுகர்வு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டு உபயோக பொருட்களுக்கான தேவை அதிகரித்தது.
இந்நிலையில், மூலப்பொருள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, 'ஏசி'க்கான மின் சேமிப்பு விதிகளில் மாற்றம் ஆகியவற்றால் ஜன., இறுதி முதல் பிப்., வரையிலான காலகட்டத்தில் இவற்றின் விலை அதிகரித்து விட்டது.
மார்ச் இறுதி பகுதி முதல் ஏப்ரல் துவக்கம் வரையிலான காலகட்டத்தில் சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றின் எதிரொலியாக இரண்டாவது சுற்று விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.
மேலும்
-
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
சோதனை என்கிறார் செல்வப்பெருந்தகை; இல்லை என்கிறது வருமான வரித்துறை
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சர்ச், மசூதி, கோயிலில் விஜய் வழிபாடு
-
மது பாட்டிலில் ரூ.10 ஸ்டிக்கர் காணோமுங்க; தேர்தல் நேரம் என்பதால் தவிர்ப்பு