வல்லம் சாலையோரம் மண் குவியல் :விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:வல்லம் சாலையோரம் குவிந்துள்ள மண் குவியலால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
வண்டலுார் -- வாலாஜாபாத், சென்னை -- திருச்சி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை, இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் நாள்தோறும் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், போந்துார், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக அதிக அளவில் மண் குவிந்து உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண்குவியலில் சிக்கி, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியல்களை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
மானாமதுரை சித்திரை திருவிழா; 28ம் தேதி திருக்கல்யாணம்
-
கண்மாய்களில் நாட்டு உடை மரங்கள் வளர்க்க எதிர்பார்ப்பு : வனத்துறைக்கு விவசாயிகள் வேண்டுகோள்
-
ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
-
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்
-
பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவுநீர் தேக்கம் :துர்நாற்றத்தால் பயணியர் பாதிப்பு
-
ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்