'சிட்டி ஸ்போர்ட்ஸ்' பகுதிக்கானது... மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் நடந்தது.
முதல் டிவிஷன்:
நத்தம் என்.பி.ஆர்., குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 21 ஓவர்களில் 102 ரன்கள் (மணியரசன் 27, முகமதுரபீக் 3/28) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் புனித பீட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 10.1 ஓவர்களில் 105/2 ரன்கள் (முகமதுரபீக் 36, நாட் அவுட், பிரகாஷ்ராஜ் 28) எடுத்து வெற்றி பெற்றது.
பழநி டாமிநேட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 37 ஓவர்களில் 150 ரன்கள் (மதன்குமார் 29, ஸ்ரீராம்வசந்த்பிரசாத் 26, இளையராஜா 5/33) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய நத்தம் என்.பி.ஆர்., கிரிக்கெட் கிளப் அணி 29.1 ஓவர்களில் 155/5 ரன்கள் (அஜித்மணி 37, இளையராஜா 85, மதன்குமார் 3/43) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 47.3 ஓவர்களில் 326 ரன்கள் (ஜெயந்த் 116, மணிகண்டன் 27, தஸ்வின் 63, மோகன்குமார் 3/56) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய வேடசந்துார் ஜாஹிர் பிராமிஸிங் லெவன் அணி 32.5 ஓவர்களில் 92 ரன்கள் (கோபிநாத் 36, அஷ்ரங்கா 3/32, மாறன் 4/11, மாதேஸ்வரன் 3/31) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
2வது டிவிஷன்:
அய்யலுார் கிளாசிக் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 205/7 ரன்கள் (ராஜபாண்டி 65, மணிகண்டன் 30, வேல்முருகன் 44, நாட் அவுட், வெங்கடேஷ் 3/42) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் வால்கனோ ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 166/6 ரன்கள் (ராஜேஷ்குமார் 26, சந்தோஷ்குமார் 43, நாட் அவுட், நவநீதகிருஷ்ணன் 43) எடுத்து தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25 ஓவர்களில் 195/6 ரன்கள் (அன்புபாண்டியன் 25, ஹரிகிருஷ்ணன் 48, சரவணக்குமார் 33, கணேஷ்மூர்த்தி 26, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய பழநி யுவராஜ் கிரிக்கெட் கிளப் அணி 22 ஓவர்களில் 122 ரன்கள் (சுதாகர் 29, பாஸ்கர் 4/11, ஜீவநந்தம் 4/47) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
மேலும்
-
ஜப்பான் 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம்
-
சூடான் விமான விபத்தில் 14 பேர் பலி
-
சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து
-
சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்
-
ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
-
3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்