துணை முதல்வர் உதயநிதி கோவையில் பிரசாரம்
கோவை: கோவை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பேசினார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு தொகுதியில் ஆதரவு திரட்டினார்.
சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதியை ஆதரித்து, மா.கம்யூ. அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஆவராம்பாளையம் ரெட்ரோஸ் மைதானத்தில் 18ம் தேதி இரவு 7 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.
தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து, 18ம் தேதி இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி (17ம் தேதி) மாலை 3:30க்கு கோவை வருகிறார். கிணத்துக்கடவு தொகுதியில் மலுமிச்சம்பட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பு, வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் பேசுகிறார். பின், கோவை தெற்கு தொகுதியில் காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில், வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து பேசுகிறார். அதன்பின், மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சென்று, பரப்புரை செய்கிறார்.
மேலும்
-
தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை