தமிழகம் வெல்லும்: ஓட்டளித்தபின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

25


சென்னை: ஒரே வரியில் சொல்கிறேன்; தமிழகம் வெல்லும் என குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்தார்.


சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் குடும்பத்துடன் வந்து ஓட்டளித்தார். பிறகு நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:


வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். ஒரே வரியில் சொல்கிறேன்; தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நல்ல கருத்து



அஜித் ஓட்டளித்த பிறகு மாற்றம் வேண்டுமா என்று கேட்டதற்கு தேவையில்லை என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நல்ல கருத்தை தான் சொல்லி இருக்கிறார்'' என்றார்.

Advertisement