தமிழகத்தில் லோக்சபா எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும்: அமித் ஷா

42

புதுடில்லி: தமிழகத்தில் லோக்சபா எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 39 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


@லோக்சபாவில் அவர் பேசியதாவது: அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை, தேர்தல் நடைமுறை மாற்றங்கள் குறித்த மசோதாக்கள் தென் மாநிலங்களவையின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, கணிசமான இழப்பை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்தும், குழப்பமும் பரப்பப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா என்பது முந்தைய அரசுகள் கொண்டு வந்த மசோதாக்களை போலவே இருக்கும்.
குறையாது

1.லோக்சபாவில் மொத்த பலமான 543 இடங்களில் கர்நாடகாவில் இருந்து 28 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இது 5.15 சதவீதம் ஆகும். தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களும், அதை தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு கர்நாடகாவின் இடங்களின் எண்ணிக்கை 28 ல் இருந்து 42 ஆக உயரும். 816 ல் எம்பிக்களை கொண்ட அவையில் கர்நாடகாவின் பங்கு சுமார் 5.14 சதவீதமாகவே இருக்கும். எனவே கர்நாடகாவிற்கு எந்த இழப்பும் இல்லை.

2. ஆந்திராவில் தற்போது 25 எம்பி தொகுதிகள் உள்ளன. லோக்சபாவில் இதன் பிரதிநிதித்துவம் 4.60 சதவீதம் ஆகும். 50 சதவீதம் அதிகரிப்பு மூலம் இந்த எண்ணிக்கை 38 ஆகவும், லோக்சபாவில் அதன் பிரதிநிதித்துவம் 4.60 ல் இருந்து 4.75 ஆகவும் அதிகரிக்கும்.

3. தெலுங்கானாவிலும் தற்போது 3.13 சதவீத பிரதிநிதித்துவத்துடன் 17 தொகுதிகள் இருக்கின்றன. இங்கும் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 3.18 சதவீத பங்குடன் 26 தொகுதிகளாக அதிகரிக்கப்படும்.


@block_B@4. தமிழகம் குறித்து பலரும் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது. அதிகரிக்கவே செய்யும் தமிழகத்தில் 39 தொகுதிகள் உள்ளன. லோக்சபாவில் அதன் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம், புது சட்டம் அமலுக்கு வந்த பிறகு எம்பி தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக உயரும். 816 எம்பிக்களில் தமிழகத்தின் பங்கு 7.23 ஆக இருக்கும். தமிழகத்துக்கு எந்த இழப்பும் இல்லை. block_B



5. கேரளாவில் 3.68 சதவீத பிரதிநிதித்துவத்துடன் 20 தொகுதிகள் உள்ளன. புது சட்டம் அமலுக்கு வந்த பிறகு அவையில் அம்மாநில எம்பிக்கள் 30 பேர் இருப்பார்கள்.

543 எம்பிக்களின் தென் மாநிலங்களில் இருந்து 129 எம்பிக்கள் உள்ளனர். இது சுமார் 23.76 சதவீதம் ஆகும். புதிய சட்டப்படி தென் மாநிலங்களில் இருந்து 195 எம்பிக்கள் இருப்பார்கள். அவர்களின் பங்கு 23.97 சதவீதம் ஆகும்.



@twitter@https://x.com/dinamalarweb/status/2044764849792864327 twitter

தொகுதி மறுவரையறை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. புள்ளி, கமாவை கூட மாற்றவில்லை. தற்போது உள்ள சட்டத்தையே நீட்டித்துள்ளோம். முன்பு இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா கூறுகிறார். மீண்டும் அப்படி செய்யப்படும் என்கிறார். கடந்தகாலங்களில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், நாங்கள் செய்ய மாட்டோம்

தவறான கருத்து



தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும்போது இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அறிக்கைகள் வருகின்றன. இது சரியானது அல்ல. தொகுதி மறுவரையறை கமிஷன் அறிக்கை, பார்லிமென்ட் ஏற்றுக்கொண்டுஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகு தான் அமலுக்கு வரும். 2029ம் ஆண்டுக்கு முன்பு அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை. 2029ம் ஆண்டு வரை தற்போதுள்ள அமைப்பு மற்றும் தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடக்கும். அகிலேஷ் உள்ளிட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement