ஹொசைரி நுால் விலை மேலும் உயர்வு:  பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

திருப்பூர்: பஞ்சு விலை உயர்வு எதிரொலியாக, நுாற்பாலைகள் நுால் விலையை கடந்த பிப்ரவரி மாதம் கிலோவுக்கு 7 ரூபாய் உயர்த்தியது.கடந்த மார்ச் மாதம் முதல் தேதி நுால் விலை மாற்றமில்லாமல் இருந்தது. பஞ்சு விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதம் நுால் விலை கிலோவுக்கு மேலும், 10 ரூபாய் உயர்த்தி நுாற்பாலைகள் அறிவித்தன. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் ஹொசைரி நுால் விலை கிலோவுக்கு மேலும், 8 ரூபாய் உயர்த்தி நுாற்பாலைகள் அறிவித்தன. அதன்படி, நுால் விலை (வரி நீங்கலாக) 'செமி கோம்டு' ரக நுால், 16-ம் நம்பர் -278 ரூபாய், 20-ம் நம்பர்-, 281, 25-ம் நம்பர் 286, 30-ம் நம்பர். 291, 34-ம் நம்பர் -299, 40-ம் நம்பர் 318 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதுபோல் 'கோம்டு' ரக நுால், 20-ம் நம்பர்- 291 ரூபாய், 25-ம் நம்பர்- 296 ரூபாய், 30-ம் நம்பர் 301 ரூபாய், 34-ம் நம்பர் 309 ரூபாய், 40-ம் நம்பர்- 328-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

''மேற்காசிய நாடுகள் இடையே போர் சூழல் நிலவுவதால் பல்வேறு மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பிரின்டிங் சாய ஆலைகள் உள்ளிட்ட ஜாப் ஒர்க் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. பின்னலாடை உற்பத்தியாளருக்கு உற்பத்தி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது.

இத்தகைய நிலையில் பஞ்சு விலை உயர்வால் நுால் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, மத்திய அரசு, பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவீதத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement