பழனியப்பா சி.பி.எஸ்.இ. பள்ளி :அவிநாசி தாலுகாவில் முதலிடம்

திருப்பூர்:அவிநாசி பழனியப்பா இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள், 2026-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மத்திய அரசு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று அவிநாசி தாலுகாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவி தன்ய ஸ்ரீ 500-க்கு 488 மதிப்பெண்கள் (ஆங்கிலம் - 97, தமிழ் -97, கணிதம் -93, அறிவியல் - 97, சமூக அறிவியல் -100) பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி தாரிகா 487 மதிப்பெண்களுடன் (ஆங்கிலம் -90, தமிழ் -98, கணிதம் -93, அறிவியல் -98, சமூக அறிவியல் -99) இரண்டாம் இடத்தையும், விப்ரஜா ஷக்தி 484 மதிப்பெண்களுடன்(ஆங்கிலம் -97, தமிழ் -97, கணிதம் -93, அறிவியல் -95, சமூக அறிவியல் -97) மூன்றாம் இடத்தையும் , காவியா 483 மதிப்பெண்களுடன்(ஆங்கிலம்-97, தமிழ் -93, கணிதம்-87, அறிவியல் -94, சமூக அறிவியல் -100) நான்காம் இடத்தையும் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் , சாதனை படைத்த மாணவர்களைப் பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், நிர்வாக இயக்குனர் பிரகாஷ், கல்வித் திட்ட இயக்குனர் சதீஷ்குமார், முதல்வர் அருணாச்சலம் ஆகியோர் ஆசிரியர்களுடன் இணைந்து பாராட்டினர்.

Advertisement