கீழக்கரை கடற்கரை திறந்தவெளி வாறுகாலால் சுகாதாரக்கேடு தொடரும் விபத்து அபாயம்
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை செல்லும் பகுதி யில் திறந்த வெளியில் கழிவு நீர் வாறுகால் செல்கிறது.
அப்பகுதியில் உள்ள தெருக்களில் இருந்து மொத்தமாக வெளியேறக் கூடிய கழிவுநீர் பிரதான கால்வாய் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பதற்கு இங்குள்ள வாறுகால் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக திறந்த நிலையில் உள்ள கால்வாயால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நிறைந்து காணப்படும் நிலையில் திறந்தவெளியில் ஓடக்கூடிய வாறுகாலை ஒட்டியே கனரக வாகனங்கள் ஆபத்துடன் செல்கின்றன. இதனால் டூவீலரில் செல்வோர் ஒதுங்க கூட இடமின்றி அச்சத்துடன் பயணிக் கின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சுகாதாரக் கேடாக திறந்தவெளியில் எவ்வித பாதுகாப்பும் இன்றி ஓடக்கூடிய கழிவுநீர் வாறுகாலை ஆய்வு செய்து பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைத்தும் மேற்புறத்தில் மூடி அமைத்தும் கடலில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
-
நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
-
பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
-
என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?