இசைக் கலைஞர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நலச்சங்கம் மற்றும் பிம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாம் இன்று நடத்துகிறது.
புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள புதுச்சேரி தமிழ்ச்சங்க வளாகத்தில் காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த முகாம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேட்வாப் தலைவர் முரளிதரன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக வீணை கலைஞர் டாடா பானுமதி கலந்துகொள்கிறார்.
டீம் பிளிஸ்பிட் நிறுவனர் முத்துலட்சுமி, புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, எம்.டி.பி.ஜி.ஐ., முதல்வர்பிரமிளா தமிழ்வாணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இசைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பரிசோதித்துக் கொள்ளலாம்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் 85259 25901, 97894 95368, 99942 08981 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்