தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.13.10 கோடி பறிமுதல்! ஆவணம் சமர்ப்பித்தோருக்கு ரூ.2.28 கோடி ஒப்படைப்பு
ராமநாதபுரம், : தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.13 கோடியே 10 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.2 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 மாலை அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகளின் படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்குமேல் மதிப்பு உள்ள பொருட்களை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும்படை யினர் பறிமுதல் செய்து கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர்.
நேற்று முன்தினம் வரை ராமநாதபுரம் தொகுதியில் ரூ.51 லட்சத்து 83 ஆயிரம், பரமக்குடி(தனி) ரூ.38 லட்சத்து 98 ஆயிரம், திருவாடானையில் ரூ. 39 லட்சத்து 17 ஆயிரம், முதுகுளத்துாரில் ரூ.19 லட்சத்து 94 ஆயிரம், இது போக பரமக்குடியில் ரூ.81 லட்சம் மதிப்புகள் நகைகள் மற்றும் கன்னி ராஜபுரத்தில் ரூ.9 கோடியே 47 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள், அலைபேசிகள், பரிசு பொருட்கள் என ரூ. 13 கோடியே 10 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட குறைதீர் குழுவினரிடம் பறிமுதல் செய்த பணம், பொருட் களுக்குரிய ஆவணங்களை வழங்கியவர்களுக்கு நேற்று முன்தினம் (ஏப்., 14) வரை ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 பவுன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரம் உரிமையாளர்கள் வசம் திருப்பி ஒப் படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கன்னிராஜ புரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9 கோடியே 47 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்களுக்குரிய ஆவணங்கள் வருமான வரித்துறையினர் மூலம் சரிபார்க்கப்பட்டு விரைவில் உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தேர்தல் புகார் எண் களான 1950, 1800 425 7092 என்ற கட் டணமில்லா தொலைபேசி எண்களில் 59 புகார்கள் பெறப்பட்டு 54க்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
தமிழகத்தை சீரழித்த திமுக-காங் கூட்டணியை விரட்டியடிப்போம்: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்
-
நேற்று சரிவு; இன்று உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
-
பெரம்பூரில் இன்று விஜய் பிரசாரம் ரத்து
-
என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
-
கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?