விஜயபிரபாகரன் வெற்றி விருதுநகர் மக்களின் வெற்றி ;தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு

1

விருதுநகர்: விஜய பிரபாகரனை உங்களை நம்பி நான் விட்டு செல்கிறேன். அவரது வெற்றி விருதுநகர் மக்களின் வெற்றி,” என விருதுநகரில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.

தே.மு.தி.க., வேட்பாளரும், அவரது மகனுமான விஜயபிரபாகரை ஆதரித்து அவர் பேசியதாவது: கவுசிகா நதி குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். விருதுநகரில் புறவழிச்சாலை அமைக்கப்படும். சாத்துார் ரோட்டில் லாரி முனையம் அமைக்கப்படும்.சர்வீஸ் ரோடுகளில் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும். விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரி கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கிறேன். விஜயகாந்தின் பூர்வீகம் இருக்கும் ஊரும் இந்த விருதுநகர் மாவட்டம் தான்.

லோக்சபா தேர்தலில் உங்களின் அன்போடு மிகப்பெரிய அளவில் ஓட்டுக்களை பெற்றுள்ளார் அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். உங்களுக்காக உழைக்க உங்களுக்காக பணியாற்ற விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். தி.மு.க., பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்துள்ளது. இது மக்கள் போற்றும் கூட்டணி. எத்தனை முனை போட்டிகள் இருந்தாலும் இந்த மதசார்பற்ற கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது. நீங்கள் வெற்றி கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். வெற்றி பெறும் கட்சியின் ஆட்சியில் உங்கள் தொகுதி இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி.

ரூ.8 ஆயிரம் ரூபாய் கூப்பனை விஜய பிரபாகரன் உங்கள் வீட்டிற்கு வந்து நேரடியாக கொடுப்பார். விஜயபிரபாகரன் தேர்தல் முடிவுக்கு பிறகு இங்கேயே வந்து வீடு எடுத்து தங்குவார். விஜயகாந்த் இருந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அவரது மறு உருவமாக இருந்து விஜய பிரபாகரன் உங்களுக்கான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுப்பார். இந் தொகுதியை முன்னேற்றுவார். விஜய பிரபாகரனை உங்களை நம்பி நான் விட்டு செல்கிறேன். அவரது வெற்றி விருதுநகர் மக்களின் வெற்றி, என்றார்.

Advertisement