திருப்புத்துாரில் ஜெயந்தன் பூஜை

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில் இன்று ஜெயந்தன் பூஜை நடைபெறுகிறது.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இந்திரனின் மகனான ஜெயந்தன் முனிவரின் சாப விமோசனம் பெற பைரவரை வழிபட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் பூஜை பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இன்று பைரவர் சன்னதி யாகசாலையில் காலை 9:00 மணிக்கு அஷ்ட பைரவர் யாக பூஜை துவங்குகிறது. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம், பின்னர் அலங்காரத்தில் தீபாராதனை நடைபெறும். இரவில் குதிரை வாகனத்தில் உற்ஸவ பைரவர் புறப்பாடு நடைபெறும்.

Advertisement