சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் மின்வெட்டு அவதியில் மக்கள்: அதிர்ச்சியில் தி.மு.க.,
சிங்கம்புணரி:சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் மீண்டும் மின்வெட்டு துவங்கியுள்ள நிலையில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வொன்றியங்களில் கடந்த ஒருவாரமாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எஸ்.புதுார் ஒன்றியத்தில் பல கிராமங்களில் குறைந்தழுத்த மின் சப்ளையே வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக 20 முறை வரை மின்தடை ஏற்படுகிறது. பிரான்மலை பகுதியிலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் பம்புசெட் ஓடாமல், கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே கோடை வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில் மின்சாரம் இல்லாததால் மேலும் அவதிக்கு ஆளாகின்றனர். மின்மோட்டார்களை இயக்க முடியாமலும், குடிநீர் கிடைக்காமலும் பாதிப்பு ஏற்படுகிறது. தேர்தல் நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும்
-
திமுகவுக்கு எதிராக மக்கள் கோபம் வெளிப்பட துவங்கி இருக்கிறது; அண்ணாமலை
-
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
சோதனை என்கிறார் செல்வப்பெருந்தகை; இல்லை என்கிறது வருமான வரித்துறை
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சர்ச், மசூதி, கோயிலில் விஜய் வழிபாடு