விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு; ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு கோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். சங்கீதாவின் விவாகரத்து கோரியதன் பின்னணி குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதாக சங்கீதா மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு 1வது குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிற்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும் அவர்கள் இன்று ஆஜராகவில்லை.
விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை ஒத்திவைக்கும் படி விஜய் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (17)
Senthamizhsudar - Chennai,இந்தியா
20 ஏப்,2026 - 17:01 Report Abuse
இது சொத்துக்களை பிரித்து ஏழுத போடும் நாடகம் அளவுக்கு மிஞ்சிய சொத்து அதனை நாடு கடத்த போடும் திட்டம் நீதிமன்றம் டிவோர்ஸ் கொடுக்க கூடாது விசாரணை செய்ய வேண்டும் அரசியல் கட்சிக்கு செலவு செய்ததாக எழுதப்படும் கணக்கையும் ஆடிட் செய்ய வேண்டும் 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
20 ஏப்,2026 - 16:54 Report Abuse
என்னிடம் இந்த வழக்கை கொடுத்தால் 20 நிமிடத்தில் தீர்ப்பு வழங்கிடுவேன். இதற்கு இன்னும் பல் வருடங்கள் எடுத்துக்கொள்வார்களா??? 0
0
Reply
M A Dass Dass - Bangalore,இந்தியா
20 ஏப்,2026 - 14:50 Report Abuse
விசில் podu 0
0
Reply
சாமானியன் - ,
20 ஏப்,2026 - 14:42 Report Abuse
விவாகரத்து தனிப்பட்ட விஷயம். அரசியல் வேறு. குடும்பம் வேறு. 0
0
BHARATH - TRICHY,இந்தியா
20 ஏப்,2026 - 16:54Report Abuse
நானும் சாமானியன்தான். அரசியலுக்கு வைரவன் குறைந்த பட்சம் குடும்பத்துக்காக உண்மையா இருக்கணும். குடும்பத்துக்கே உண்மையா இல்லாதவன் நாட்டுக்கு எப்படி இருப்பான். 0
0
Reply
சந்திரன் - ,
20 ஏப்,2026 - 14:33 Report Abuse
சங்கீதா நல்ல பெண்மணி. நீதிமன்றம் உடனடியாக அவருக்கு டைவர்ஸ் தந்து ஜோசப்விஜய் என்கிற துரோகியிடமிருந்து விடுதலை தர வேண்டும் 0
0
Reply
பாரதி - ,
20 ஏப்,2026 - 14:19 Report Abuse
தயவுசெய்து நீதித்துறை இதை ஒத்திவைத்துக் கொண்டே இருக்க வேண்டும்
இருவரும் வயசாகி இருவரில் ஒருவர் சாகும் வரை
அதுவரை நீங்களும் நல்லபடியா சம்பளம் வாங்கிக் கொண்டே இருக்கலாம்
உங்களது தாமதத்தால் ஏற்கனவே பல கோடி குடும்பங்கள் அழிந்துவிட்டன நாசமாகி
ஆனால் அவர்களின் சாபம் உங்களை சும்மா விடாது
மக்களின் வரி தானே ஒன்றும் கவலைப்படாதீர்கள் 0
0
Reply
anbu suresh - ,இந்தியா
20 ஏப்,2026 - 14:09 Report Abuse
ஆமா வீதிக்கு வீதி ரோடுக்கு ரோடு நம் முடி எல்லாம் கலர் அடிச்சுட்டு புள்ளைங்கோ அவங்க கிட்ட கேட்டேன் கேட்பதற்கு முன்னாலேயே எடுத்தான் பாரு வீசில புக்கு மொக்குக்கு சரக்கு தம்பி உங்க ஓட்டு எல்லாம் யாருக்கு சொன்னா பாரு என்ன நம்ம கிட்ட எல்லாம் ஓட்டு கிடையாது ஆனால் இருந்ததென்றால் விசிலுக்கு தானே சொன்னான் பாரு கஞ்சா மது ரவுடிசா இதுல 90 சதவீதம் விசிலுக்கு தொடர்பு இருக்கு வேணா நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க 0
0
Reply
Murugan - ,இந்தியா
20 ஏப்,2026 - 13:31 Report Abuse
பெரிய ராசு , நான் உன்ன மாதிரி ஜால்ரா இல்ல . நான் பன்னாட்டு நிறுவனித்தில் வெளிநாட்டில் வேலை செய்பவன் , நம் தமிழ் நாடு நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பவன் ... என்னுடைய கேள்விக்கு பதில் சொல் , ஒரு அடிப்படை வசதிகளை கூட செய்யாத இந்த திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போடவேண்டும் என்ற உன் மன நிலையை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன். 0
0
Senthoora - Sydney,இந்தியா
20 ஏப்,2026 - 14:42Report Abuse
புரியுது வெளிநாட்டில் விசில் அடித்துதான் வேலைபோல. 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
20 ஏப்,2026 - 12:23 Report Abuse
அரசியல்வாதியாக பல "வீடுகள்" அவசியம் 0
0
Reply
Murugan - ,இந்தியா
20 ஏப்,2026 - 11:56 Report Abuse
தமிழக மக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் மனசாட்சியை கேளுங்கள்.
- பெண்கள் பாதுகாப்பு இருக்குகிறதா
- போதை பொருட்களால் ஏற்படும் கற்பழிப்புகள் மற்றும் கொலைகள்
- அளவிற்க்கு அதிகமாக தலை விரித்தாடும் லஞ்சங்கள்
- வேலை இல்லாமல் தவிர்க்கும் பட்டதாரிகள்
- படிப்பிற்கு ஏற்ற சம்பளங்கள் இருக்கிறதா
- விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுகள்
- எங்கு பார்த்தாலும் ஒரே புகை மண்டலமாக இருக்கும் தூசிகள் நிறைந்த சாலைகள் மற்றும் கழிவு நீர் கலக்கும் குடி தண்ணீர்
ஒரு அடிப்படை வசதிகளை கூட செய்து தரமுடியாத இந்த DMK மற்றும் ADMK அரசாங்கள் நமக்கு தேவையா .
மாற்றம் தேவை . இந்த ஒரு முறை வாக்களியுங்கள் TVK விசில் சின்னத்திற்கு . 0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
20 ஏப்,2026 - 12:39Report Abuse
உங்க கொள்கை என்னனு சொல்லுங்க ..வண்டி வந்த பின்னாடி ஓடணும் விசில் அடிக்கணும் கீழே விழுந்து சாகனும் , சீமானை கூட ஏத்துக்கலாம் ஆனா கொள்கையே இல்லாத ஒருத்தனிடடம் பதவி என்பது குரங்கு கையில் பூமாலை ..3500 மாசம் பிரி அப்படீன்னு சொல்லையே உங்க கொள்கை என்னனு விளங்கிடுச்சு ,,முருகன் போயி படிச்சு நல்ல வேலைக்கு போயி குடும்பத்தை காப்பாத்துங்க 0
0
BHARATH - TRICHY,இந்தியா
20 ஏப்,2026 - 17:24Report Abuse
41 பேரை கொன்னவனும் வரி ஏய்ப்பு செய்தவனும் உங்களுக்கு தேவையா. போதும் தமிழக மக்களே சிந்தியுங்கள். தப்பி தவறி கூட இந்த முட்டாள்களுக்கு வோட்டை போட்டு விரயம் செய்து விடாதீரகள். ரெண்டு தலைவர்கள் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் சீமான். 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement