செல்வப்பெருந்தகை நாடகம்; அம்பலமாக்கியது வருமான வரித்துறை!

55

நமது சிறப்பு நிருபர்




சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர், வீட்டில் தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை புகார் கூறிய நிலையில், சோதனையே நடத்தவில்லை என்று வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமாகியுள்ளது.


தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வருகிறார். கீழ்பாக்கத்தில் வசிக்கிறார். இன்று (ஏப்ரல் 20) காலை முதல் தன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்றும், 'சோதனை என்ற பெயரில் தன்னை வருமான வரித்துறையினர் சிறைப்பிடித்துள்ளனர்' என்றும் செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் ஹிந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை' என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர்.



பிரசாரத்திற்கு செல்ல விடாமலும், எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமலும் சோதனை என்ற பெயரில் என்னை சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது, அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.

இதே விஷயத்தை வீட்டுக்கு வெளியே நின்று பேட்டியும் கொடுத்தார்.


@block_G@

முதல்வர் கண்டனம்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிரசாரத்தை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்; இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பாஜ அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். block_G


ஆனால், சில மணி நேரங்களிலேயே செல்வப்பெருந்தகையின் நாடகத்தை வருமான வரித்துறை அம்பலமாக்கியது. தாங்கள் சோதனையே நடத்தவில்லை என்றும், அவர் சொல்வதில் உண்மையில்லை என்றும் வெட்டவெளிச்சமாக்கியது.


@block_G@

மறுப்பு

இது குறித்து வருமான வரித்துறை கூறியதாவது: செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. ராகுலின் பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுத்ததாக, செல்வபெருந்தகை கூறுவது உண்மையில்லை. அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை. இவ்வாறு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. block_G

Advertisement