கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் வெல்வோம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

46


சென்னை: கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்; 200 தொகுதிகளில் வென்று வரலாறு படைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


அவரது அறிக்கை: ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை நேற்று முடித்தேன். ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக ஓட்டு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன். கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்; வெல்வோம் 200; படைப்போம் வரலாறு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஓட்டு சேகரிப்பு




இதற்கிடையே, இன்று (ஏப்ரல் 20) அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். பூங்காவில் இருந்தவர்கள் ஸ்டாலின் உடன் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 21) உடன் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

Advertisement