வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற மங்களப் பொருட்களை வாங்குவதும், மகாலட்சுமியை வழிபடுவதும் செல்வம் மற்றும் நற்பலன்களைப் பெருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாள் நேற்று (ஏப்ரல் 19) காலை 10:49 முதல் இன்று (ஏப்ரல் 20) காலை 7:27 வரை இருந்தது. அட்சய திருதியையொட்டி நேற்று நகைக்கடைகளில் விற்பனை களைகட்டியது.
இந்நிலையில் வார தொடக்க முதல் நாளான இன்று (ஏப்ரல் 20) தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் தான்; துல்லிய கருத்துகணிப்புகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
உங்கள் ஓட்டுச்சாவடி, பாகம் எண் வரிசை எண்ணை அறிவது எப்படி?
-
வைட்டமின் 'ப' வராததால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பரிதவிப்பு
-
ரசிகர் கூட்டம் ஓட்டாகாது
-
எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்
-
காத்தாடிய ரோடு ஷோ; கடும் கோபத்தில் அமித் ஷா