'மினி பார்' ஆக மாறி வரும் பஸ் ஸ்டாப் நிழற்குடைகள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை சிலர் மது அருந்தும் மினி பாராக பயன்படுத்துவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் -ராமேஸ்வரம், மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் கிழக்கு கடற்கரை சாலை, வழுதுார், காரிக்கூட்டம், வாலந்தரவை, உச்சிபுளி, பெருங்குளம், அச்சுந்தன்வயல், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் வசதிக்காக கட்டடங்களாகவும், கூடாரங்களாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உணவு குப்பை, மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் ஓய்வெடுக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே போதை ஆசாமிகளை கண்டறிந்து விரட்ட போலீசார் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.--
மேலும்
-
வேட்டையாடியது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தவரை கொன்றவர் கைது
-
கோடை வெயிலின் தாக்கம்: 20 வயது வாலிபர் பலி
-
வக்கீலை செருப்பால் அடித்த பெண் இன்ஸ்., மீது வழக்கு பதிய உத்தரவு
-
மஹா., போக்குவரத்து அதிகாரிக்கு மிரட்டல்
-
பந்துக்குள் கஞ்சா, மொபைல் போன் சிறைக்குள் வீசப்பட்டதால் பரபரப்பு
-
'பயோ காஸ்' உற்பத்தியில் ரூ.120 கோடி வருவாய் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் திட்டம்