கனரக லாரி கவிழ்ந்தது : டிரைவருக்கு காயம்
மானாமதுரை:மானாமதுரை அருகே நிலக்கடலை பருப்பு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர் தஞ்சாவூரில் இருந்து 10 டன் அளவிலான நிலக்கடலை பருப்புமூடைகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரை வழியாக தூத்துக்குடி சென்றார். திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மானாமதுரை சிப்காட் அருகே சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் வடிவேலுக்கு காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் லாரியில் இருந்த 10 டன் நிலக்கடலை பருப்பு மூடை சிதறியது. மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
Advertisement
Advertisement