குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடும் சூழலை ஏற்படுத்தி தருவேன்: கார்த்திக் மோகன் உறுதி

சென்னை:''அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் பூங்காவை உருவாக்கி, குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான விளையாட்டு சூழலை உருவாக்குவேன்,'' என, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன் வாக்குறுதி அளித்தார்.

வில்லிவாக்கம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக கார்த்திக் மோகன் களம் காண்கிறார். நேற்று காலை, 95வது வார்டுக்கு உட்பட சோலையம்மன் கோவில் தெரு, மாதா கோவில் எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்பகுதி மக்கள், குழந்தைகள் சிறுவர் பூங்கா வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவர்களிடம் கார்த்திக் மோகன் பேசியதாவது :

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின், இப்பகுதியில் சிறுவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிரை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறுவர் பூங்கா அமைக்கப்படும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான, அரோக்கியமான விளையாட்டு சூழலை உருவாக்குவேன்.

மாதா கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டா பகுதியில், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அனைத்து நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி கூட்டத்தை அமைத்து தருவேன்.

லாக்மா தெருவில் பழடைந்துள்ள கழிநீர் வடிகால் குழாய்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அதிக திறன் கொண்ட புதிய வடிகால்வாய் அமைக்கப்பட்டும். இதனால், மழைக்காலங்களில் நீர்தேக்குவது முற்றிலும் தடுக்கப்படும். வில்லிவாக்கம் தொகுதியை முழுமையான முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல திட்மிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், அதேபகுதியில், சிலம்பம் பயிற்சி செய்துக் கொண்டிருந்த சிறுவர்களை சந்தித்து உரயைாடினார். அப்போது, அந்த சிறுவர்கள் இடையூறின்றி பயிற்சி பெற, பிரத்யேக மையம் வேண்டும் என, தெரிவித்தனர். அதே பகுதியில் சிலம்பம் விளையாட்டு பயிற்சி பெற மையம் அமைத்து தரப்படும் என, கார்த்திக் மோகன் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து, த.வெ.க.,வின் வில்லிவாக்கம் பகுதி செயற்குழு உறுப்பினர் ஜாப்லி, அ.தி.மு.க., பிரமுகர் அசோக்குமார் உள்ளிட்ட 150 மாற்று கட்சி உறுப்பினர்கள், மாவட்ட செயலர் சேகர்பாபு வழிகாட்டுதலுடன், கார்த்திக் மோகன் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைத்தனர்.

மாலை, வில்லிவாக்கம் கிழக்கு பகுதியான, 98வது வார்டு, கே.கே., நகர் ஒன்றாவது தெருவில் பிரசாரத்தை துவங்கி, கே.எச்., சாலை வழியாக, போக்ஸ் சந்து, என்.எம்.கே., தெரு, சோமசுந்தரம் தெருக்கள், வி.பி., காலனி முழுவதும் பிரசாரத்தை நிறைவு செய்தார். நிகழ்வில் பகுதி செயலர்கள் ஜெயின், வாசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

***

Advertisement