அமெரிக்காவில் கஞ்சாவுடன் பிடிபட்ட ஏர் இந்தியா துணை விமானி; இந்தியாவுக்கு நாடு கடத்தல்
நமது நிருபர்
அமெரிக்க விமான நிலையத்தில் பையில் கஞ்சா வைத்திருந்த ஏர் இந்தியா துணை விமானி பிடிபட்டதை அடுத்து, அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த துணை விமானி ஒருவரின் பையில் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இவர் டில்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்துள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் விமானத்தை இயக்குவதற்காக சென்றுள்ளார்.
அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் அவரது உடமைகளைச் சோதித்தபோது கஞ்சா இருப்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் விமானி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் கஞ்சாவைப் பயன்படுத்தவில்லை என்றும், அவரது பையில் மட்டுமே அது இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்தவொரு சட்ட மீறலுக்கும் இடமில்லை என்பதில் ஏர் இந்தியா விமான நிறுவனம் உறுதியாக உள்ளது, சம்பந்தப்பட்ட விமானி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா வை டாடா வாங்கியதில் இருந்து, குஜராத் துறைமுகங்களை நண்பர் வாங்கியதில் இருந்து போதை பொருட்கள் அதிகம் பிடிபடுகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருக்கிறது.
பையில் மட்டுமே வைத்திருந்தானாம் விமானங்களை புறப்படுவதற்கு முன் பல முனைகளில் சோதிப்பதை போல இவங்களை சரியாக சோதனை செய்வதில்லை போல அதான் இப்படி பஸ் டிரைவர்கள் சரக்கு அடித்துவிட்டு ஓட்டுகிறானுகள் இவனுக கஞ்சா ரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் என்னத்த அடிக்கறானுகளோ?
இப்போ தெரிகிறதா ஏர் இந்தியா விமானம் பூமியில விழும் காரணம். கஞ்சா அடித்தால் ஏன் இது நடக்காது.மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது
-
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: பிரதமர் மோடி
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'