என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்
சென்னை: ''என் குடும்பத்தை சிதைத்த பெருமை, அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: பா.ம.க.,வை கைப்பற்ற வேண்டும் என்பதே அன்புமணியின் எண்ணமாக இருந்ததை, இப்போது தான் புரிந்து கொண்டேன். கட்சி தலைவர் பொறுப்புக்கு ஏற்றாற்போல நடந்து கொள்ளாததால், தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டு, என் மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராகவும், 25 ஆண்டுகள் உழைத்த ஜி.கே.மணியை கவுரவ தலைவராகவும் நியமித்தேன்.
தமிழகம் முழுதும் அவதுாறு பரப்பி வரும் அன்புமணி, கூசாமல் பொய் பேசக்கூடியவர்; அவரது குடும்பத்தினரையும் பொய் சொல்ல பழக்கி வைத்துள்ளார். குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணிக்கும், அவரது மனைவி சவுமியாவுக்கும் உண்டு. என் பேத்திகளையும் அதேபோல பழக்கி விட்டனர்; என் இறப்பு எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.
குலதெய்வம் என்று என்னை அழைத்த கட்சியினரை, பணம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். மருத்துமனையில் மூன்று நாட்கள் இருந்தேன். கட்சியினர் தேம்பி அழுதனர். ஆனால், அன்புமணியும், அவரது குடும்பத்தினரும் வந்து பார்க்கவில்லை; போனில் கூட விசாரிக்கவில்லை; அம்மாவை மட்டும் வந்து பார்க்கிறார்.
எனக்கு வயதாகி விட்டது என்கிறார். நான் தினமும் நடக்கிறேன்; நீச்சல் அடிக்கிறேன்; வயதானாலும் வலிமையாக இருக்கிறேன். மூன்று மாத குழந்தையை வைத்துக் கொண்டு, கூசாமல் பொய் பேசி ஓட்டு கேட்கின்றனர். என் பேத்திகள் கண்ணீர் சிந்துவதை பார்த்து, 'அய்யோ பாவம்' என சிலர் ஓட்டு போட்டு விடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
@block_G@
ராமதாசின் படம், பெயர் வேண்டும். ஆனால், ராமதாஸ் வேண்டாம் என அன்புமணி நினைக்கிறார். எங்கள் குடும்பத்தைப் பிரித்தது அன்புமணியும், சவுமியாவும் தான். இப்போது அப்பா, அம்மா கூட யாரும் இல்லாததால், அவர்களை கவனித்துக் கொள்ளவே, நாங்கள் அப்பாவுடன் இருக்கிறோம்.
இப்போது, ராமதாசின் சொந்த வாழ்க்கையை சொல்லி அவமானப்படுத்துகின்றனர். அவர், 20 வயது பெண்ணை திருமணம் செய்தது போல கேவலப்படுத்துகின்றனர். அது, 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது; என் அம்மா சம்மதத்துடன் தான் நடந்தது. எல்லா குடும்பத்திலும் நடப்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.block_G
மக்களுக்கு என்ன பண்ணுனீங்க அதை சொல்லுங்க .உமது சாதி மக்களுக்கே ஒன்றுமே செய்யவில்லை நீங்க.
பெயரில் இருக்கும் அன்பை பெற்றோரிடம் ஒரு போதும் காட்டியதில்லை...
என்ன பண்ணுவார் பாவம் ஒன்றா இருந்தால் பரவாயில்லை இரண்டாய் இருந்தால் சிக்கல் தான்
இந்த முதியவர் தன் சுயலாபத்திற்காக வன்னியர்களை அடகு கூட வைக்க தயங்கமாட்டார் இவ்வளவு நாளும் பாவம் வன்னியர்கள் 35... 40 வருடமாக போராடிக்கொண்டு உள்ளனர் ஆனால் அவர்களுக்கு இன்னும் இட ஒதுக்கீடு எட்டா கணியாவே உள்ளது ஏன் இந்த முதியவர் அதை பெற்றுக்கொடுக்க முடியவில்லை?
திமுகவுக்காக ஏதோ என்னால் ஆனது தாத்தா மைண்ட் வாய்ஸ்
வயதான காலததில் உங்களுடைய வறட்டு கௌரவத்துக்காக கட்சியை சீரழிப்பது நியாயமா. அடுத்த தலைமுறையை தனக்கு போட்டியாக நினைக்கும் தகப்பனார் இவர் மட்டுமே.
Dr. Ramdoss ji , you act still young and your desires remain young but refused to get out of past
இந்த மண்ணின், பணத்தின் மீது உள்ள பேராசையை நீக்குங்கள். இறைவன் பெயரை நினையுங்கள். மகனுக்கு வழிவிட்டு கௌரவமாக அரசியலில் இருந்து விலகுங்கள். எப்படியும் உங்கள் மகள், உங்கள் மகனின் அரசியல் அனுபவத்தை, நிரப்ப முடியாது. அதை புரிந்து கொள்ளுங்கள்.
சில உறவுகளின் இயல்பான இயற்கையான தன்மை எங்கும் மாறாது, எல்லா குடும்பங்களுக்கும், எல்லா காலங்களுக்கும் பொருந்தும். மகள் ஒரு குடும்பத்தில் பிரதானம், அந்த முக்கியத்துவத்தை மருமகளால் சகிக்க முடியாது. அதே மருமகள் தன் தாய் வீட்டில் தானே பிரதானமாக இருக்கவே விரும்புவாள்.
குடும்ப அரசியல் பேசி கட்சி குட்டி சுவர் ஆகிறது!மேலும்
-
அலுவலகத்தில் லட்சணக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
-
அதிகாரங்களை ஏவி என்னை மிரட்ட முடியாது; விஜய்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு