கட்டுமான திட்டங்களுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., எப்படி கணக்கிடப்படுகிறது?
சென்னை போன்ற நகரங்களில் காலி நிலம் கிடைப்பது மிகவும் அரிதானதாக மாறி வருகிறது. இதனால், குறைந்த நிலத்தில் அதிக எண்ணிக்கையில் வீடு கட்டுவதற்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
பொதுவாக, நகர், ஊரமைப்பு சட்டப்படி, ஒவ்வொரு நகரத்திலும், நிலத்தின் அளவு அடிப்படையில் அதில் கட்டப்படும் கட்டடத்துக்கான தளபரப்பு குறியீடு வரையறை செய்யப்படுகிறது. எப்.எஸ்.ஐ., எனப்படும் இந்த தளபரப்பு குறியீட்டை பயன்படுத்துவது குறித்த அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சிரமம் இந்த அடிப்படையில் தமிழகத்தில் சென்னையை அடிப்படையாக வைத்து தற்போது இரண்டு மடங்கு எப்.எஸ்.ஐ., அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, 1,000 சதுரடி நிலத்தில், தரைத்தளம், முதல் தளம் என்ற அடிப்படையில், 2,000 சதுரடி வரை கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது.
இதில், 2,400 சதுரடி நிலம் வைத்துள்ள நபர்களால் அதில் இரண்டு மடங்கு அளவுக்கு கட்டடம் கட்டுவதே சிரமமாக உள்ளது.
ஆனால், பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த அளவு போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் பரப்பளவுக்கு அனுமதி கோரப்படுகிறது.
இதனால், சம்பந்தப்பட்ட மனை அமைந்துள்ள சாலையின் அகலம் அடிப்படையில் கட்டம் செலுத்தி பெறும பிரீமியம் எப்.எஸ்.ஐ., வழங்கப்படுகிறது. இதன்படி, 30 அடி அகலம் அதற்கு மேற்பட்ட அகல சாலைகளில் உள்ள மனைகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.
இதற்கு, அந் த நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிக வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியி ருப்புகள் கட்டும் போது பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது என்பதை வீடு வாங்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதில், நீங்கள் வீடு வாங்கும் குடியிருப்பு திட்டத்தில் எந்த அளவுக்கு பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறப்பட்டுள்ளது, அதற்கான செலவு என்ன என்பதை பாருங்கள். குறிப்பாக, அத்திட்டத்தில் இயல்பா ன முறையில் அனுமதிக்கப்படும் எப்.எஸ்.ஐ., அடிப்படையில் எத்தனை வீடுகள் வரும், பிரீமியம் எப்.எஸ்.ஐ., காரணமாக எவ்வளவு வீடுகள் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கட்டுமான நிறுவனங்கள் அதிக வீடுகள் கட்டுவதற்கா க பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறுவது அவர்களின் வணிக மேம்பாட்டுக்காக மட்டுமே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும் செலவு வீடுகள் விலையில் தான் சேர்க்கப்படும்.
கட்டடத்துக்கான எப்.எஸ்.ஐ., விவகாரம் கட்டுமான நிறுவனம், பொறியாளர்கள் சார்ந்தது என்று ஒதுங்கி இருக்காமல் இது குறித்து வீடு வாங்குவோர் விசாரிக்க வேண்டும்.
அப்போது, இதன் உண்மை நிலவரத்தை மக்கள் அறிய முடியும் என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுனர்கள்.
மேலும்
-
திமுக கூட்டணியில் இணைந்ததுக்கு காரணம் என்ன; உண்மையை உடைத்த கமல்
-
தமிழகத்தை மீட்டெடுக்கவே சில காலம் தேவைப்படும்; திமுகவை விளாசிய அண்ணாமலை
-
இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு
-
சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு
-
திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது
-
ஓட்டுச்சாவடிகளில் பல வண்ணங்களில் குறியீடு; வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க ஏற்பாடு