விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்த வாலிபர்
புதுடில்லி தென் கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள கல்காஜி என்ற இடத்தில், ஒரு விடுதிக்குள் கணவன் - மனைவி என கூறி அறை எடுத்து, நேற்று முன்தினம் தம்பதி தங்கினர். இருவரும் மது அருந்திய நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், அந்த இளம்பெண்ணை, 28 வயதான அந்த நபர், காலால் மிதித்து தள்ளினார். இதனால் கட்டிலில் இருந்து கீழே விழுந்த அந்த பெண் மயங்கினார். அவரின் நாடியை பிடித்து சோதித்த அந்த வாலிபர், அந்த பெண் இறந்து விட்டதாக தவறாக நினைத்து, பக்கத்து அறைக்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயக்கத்திலிருந்து நேற்று காலை விழித்த அந்த பெண், பக்கத்து அறையில், வாலிபர் துாக்கில் தொங்கியதை பார்த்து, அலறினார். அறைக்குள் நுழைந்த ஊழியர்கள், அந்த வாலிபர் உடலை கயிற்றில் இருந்து இறக்கினர்.
போலீசாருக்கு தகவல் அளித்த விடுதி ஊழியர்களால் அங்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள் உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்கள் மத்திய ஜவுளித்துறை கணிப்பு
-
ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை
-
ஆயிரம் சந்தேகங்கள்: தெரியாதவரின் பணம் வங்கி கணக்குக்கு வந்தால் என்ன செய்யலாம்?
-
திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0
-
'ஏசி, மொபைல், பிரிஜ், டிவி ' விலை இம்மாத இறுதியில் உயர்கிறது
-
வாழைத்தார், தேங்காய் ரூ.9.81 லட்சத்துக்கு ஏலம்