விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வரவேண்டும்
தி.மு.க., ராஜேந்திரன் பிரசாரம்
திருவள்ளூர்: ''திருவள்ளூர் தொகுதியில் இதுவரை விடுபட்ட அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்ற, முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வரவேண்டும்,'' என, தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த இரண்டு முறை வெற்றி பெற்றவர், தற்போது 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கி, பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை கடம்பத்துார் ஒன்றியம் கீழச்சேரி, பண்ணுார், புதுப்பட்டு, கொட்டையூர், முதுகூரிலும், நேற்று காலை அதிகத்துார் மற்றும் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ராஜேந்திரன் பேசியதாவது:
திருவள்ளூர் தொகுதி மக்கள் ஆதரவுடன், கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக உள்ளேன். உங்களுக்கு சேவை செய்ததால் தான், என்னை நீங்கள் மனப்பூர்வமாக தேர்வு செய்தீர்கள். உங்களில் ஒருவனாக தற்போது மீண்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.
ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் இருந்த போது சாலை, குடிநீர், மேம்பாலம், அங்கன்வாடி மையம், பள்ளி கட்டடங்கள் என, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். விடுபட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா, வீடில்லாதவர்களுக்கு கலைஞர் வீட்டுமனை திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற, மீண்டும் என்னை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வர், இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்திட்டங்கள் மீண்டும் தொடர நீங்கள் தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன், காங்., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - வி.சி.க., உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும்
-
இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
-
'கர்நாடக போலீஸ் அதிகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர்' டி.ஜி.பி., சலீமுக்கு எஸ்.பி., காசிநாத் பரபரப்பு கடிதம்
-
பெங்களூரில் மழைக்கு வாய்ப்பு கர்நாடகா முழுதும் மஞ்சள் 'அலெர்ட்'
-
ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை விழா
-
'மிஸ் இந்திய ா ' போட்டியில் வென்ற காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் மகள்
-
'நிலத்தடி நீரை மறந்து விடுங்கள்... வழிந்தோடுவதை பயன்படுத்துங்கள்!'