இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
தங்கவயல்: தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் நவீன், 25. இவரது உறவினரின் மகள் நிஷா, 10.
இவர்கள், தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்காக, இரு சக்கர வாகனத்தில் தங்கவயல் பிச்சபள்ளிக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து நேற்று குடியாத்தத்திற்கு, இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.
பேத்தமங்களா அருகே உள்ள பில்லகொண்ட ஹள்ளி கிராமம் அருகே வேகமாக வந்த கார், இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நவீன், 25 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நிஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
-
திருப்பூர் சாசனம் - 2026.. வாக்குறுதி அல்ல... வளர்ச்சியே இலக்கு
-
சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா
-
அலுவலகத்தில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல்; காங் எம்பி கார்த்தி சமாளிப்பு
Advertisement
Advertisement