பெங்களூரில் மழைக்கு வாய்ப்பு கர்நாடகா முழுதும் மஞ்சள் 'அலெர்ட்'
பெங்களூரு: பெங்களூரு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; கர்நாடகா முழுதும் மஞ்சள் 'அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தி ய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், வட உள்பகுதி, தென் உள்பகுதியில் உள்ள மாவட்டங்களில் இன்று முதல் 23ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளது. கர்நாடகா முழுதும் மஞ்சள் 'அலெர்ட்'விடுக்கப்படுகிறது.
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது மதிய நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குடகு, ஹாசன், சிக்கமகளூரு, ஷிவமொக்கா உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் மாலை நேரங்களில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்