'மிஸ் இந்திய ா ' போட்டியில் வென்ற காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் மகள்
உத்தரகன்னடா: கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலின் மகள் சாத்வி, 'பெமினா மிஸ் இந்தியா - 2026' பட்டத்தை வென்றுள்ளார். இவர் மிஸ் ஒர்ல்டு - 2026 ல், இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து, சதீஷ் சைல் அளித்த பேட்டி:
ஒடிஷாவின் புவனேஸ்வரத்தில் ஏப்ரல் 18 ல் நடந்த 'பெமினா மிஸ் இந்தியா' போட்டியில், என் மகள் சாத்வி கோவா சார்பில் பங்கேற்று, கிரீடம் வென்றுள்ளார். பல்வேறு மாநிலங்களின் போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களை பின்னுக்கு தள்ளி, சாத்வி வெற்றி பெற்றுள்ளார்.
என் மகள் தொழிலதிபராக வர வேண்டும் என்பது, என் விருப்பமாக இருந்தது. அவர் மாடலிங் துறைக்கு செல்வார் என, நான் எதிர்பார்க்கவில்லை. இதை என்னிடம் கூறியபோது, நான் என் மகளை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரிடம் அழைத்து சென்று, அறிவுரை கூற வைத்தேன்.
மகளின் மனதை மாற்றி, தொழிலதிபராக்க முயற்சித்தேன். ஆனால் சிவகுமார், 'உங்கள் மகளின் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்பளியுங்கள்' என்று எனக்கு ஆலோசனை கூறினர். இப்போது என் மகள், மிஸ் இந்தியாவாக, நாட்டுக்கு பெருமை சேர்த்தது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சாத்வி பிறந்தது கோவாவில். எனவே அந்த மாநிலத்தின் பிரதிநிதியாக, மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். முதலில் என் மகள் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவர் தன் முயற்சியால், அனைத்து சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றார். அவர் கிரீடம் சூட்டிக்கொள்ளும் காட்சியை, நான் நேரில் பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் முடியாமல் போனது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஊழலற்ற ஆட்சியை விஜய் தருவார்:P த.வெ.க., வேட்பாளர் பிரபாகர் பேச்சு
-
இருசக்கர வாகன அணிவகுப்பில் ஓட்டு சேகரித்தார் சிற்றரசு
-
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
-
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறப்பு? மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை!
-
சென்னை சூப்பர் லீக் கால்பந்து :பச்சையப்பாஸ் எப்.சி., அபாரம்
-
சீனியர் லீக் கால்பந்து போட்டி: சென்னை போலீஸ் அபாரம்