கிசு கிசு- 1

@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக அழைத்து வர வேண்டும் என, சூரிய கட்சி சார்பில், ஒரு வாரத்துக்கு முன் முயற்சித்தனராம். ஆனால், தேசிய தலைவர் முரண்டு பிடிக்க, சூரிய கட்சியில் இருந்து மெனக்கெடுதலை நிறுத்தி விட்டனராம். கொஞ்சம் தாமதமாக, பிரசாரத்துக்கு வர தேசிய தலைவர் ஒப்புக்கொள்ள, 'எங்க கட்சித் தலைவரோடு இணைந்து பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை' என சூரிய கட்சி தரப்பு சொல்லி விட்டதாம்.block_B

@block_B@ 'டல்' அடிக்கும் பிரசாரம் 2. தாமரை கட்சி சார்பில் தலைநகரில் போட்டியிடும் நபருக்கு மட்டும் சிறப்பு ஊக்கத் தொகையாக, பெரும் தொகையை கட்சியில் இருந்து ஒதுக்கிக் கொடுத்தனராம். ஆனால், கட்சி சார்பில் அன்றாடம் தேர்தல் பணிக்கு வருவோருக்குக் கூட, தொகையை எடுத்து தாராளம் காட்ட மறுப்பதால், கட்சியினர் தேர்தல் வேலை பார்க்க மறுக்கின்றனராம். இது தொடர்பாக, கட்சித் தலைமைக்கு புகாராகச் சென்றும், வேட்பாளர் கண்டுகொள்ளாததால், பிரசாரம் 'டல்' அடிக்கிறதாம்.block_B

Advertisement