மக்கள் மனசுல யார்

தலைவிரித்தாடும் லஞ்சம்



நான் பஞ்சர் பார்க்கும் தொழில் செய்கிறேன். திமுக ஆட்சியில் அதிகளவு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு அலுவலகங்களுக்கு சென்றால் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பதில்லை, போதைப் பழக்கம் பெருகிவிட்டது. இதே நிலை தொடரக்கூடாது. வரும் தலைமுறையினரின் நலம் கருதி தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் என் ஓட்டு

நாகராஜன், 43
சிக்கல், ராமநாதபுரம்

ஆண்கள் கஷ்டத்தையும் பாருங்க!



தி .மு.க., ஆட்சி நன்றாக தான் உள்ளது. ஆனால், பெண்களுக்கு தான் அதிக உதவி செய்கிறது. வயதான ஆண்களுக்கு எந்த உதவியும் இல்லை. அவர்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்தால் நிம்மதியாக இருக்கும். பலர் உணவின்றி சிரமப்படுகின்றனர். சுயமாக வேலை செய்ய சிறு கடன் வழங்க வேண்டும். ஆண்கள் கஷ்டத்தையும் தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும்.

ரமேஷ், 51 தெப்பக்குளம், மதுரை

Advertisement