'எங்களுக்கு உதவும் அண்ணியார்'
ம துரை மத்திய தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக சினிமா இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து தொகுதி பிரச்னைகள் குறித்தும், பொதுவாக அரசியல் நடப்புகள் குறித்தும் பேட்டி கொடுத்து வருகிறார்.
அடுத்தடுத்து தி.மு.க., அரசுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து, எதிராக பேசி வரும் பிரேமலதாவால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரையில் பேட்டியளித்த சுந்தர்.சி, “அண்ணியார் தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும் வெளியில் இருந்து அ.தி.மு.க.,விற்காக தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கூற வேண்டிய விஷயத்தை அவர் கூறி கொண்டிருக்கிறார்.
''முதல்வர் முன்பாகவே, 'தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை கலாசாரம் பெருகி உள்ளது' என வெளிப்படையாக கூறிய தைரியமிக்க வீரப்பெண்மணி பிரேமலதா,'' என புகழாரம் சூட்டினார்.