'தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்ற இ.பி.எஸ்., முதல்வராக வேண்டும்'
குளித்தலை, குளித்தலை
தொகுதியில், இரணியமங்கலம், நல்லுார் ஊராட்சி பஞ்., பகுதிகளில்
குளித்தலை அ.தி.மு.க., வேட்பாளர் கருணாகரன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர், பேசியதாவது:
கடந்த
அ.தி.மு.க., ஆட்சியில், பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு
குடும்பத்திற்கும் உதவித்தொகையாக, 10 ஆயிரம், குலவிளக்கு
திட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும், 2,000
ரூபாய், ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டணமில்லா பஸ்
பயணத்திட்டம், அனைவருக்கும் வீடு வழங்க அம்மா திட்டம், வாழ்வாதார
உதவியாக ஆண்டுக்கு மூன்று இலவச கஸ் சிலிண்டர், ஆண்டுதோறும் தரமான
பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இல்லத்
தரசிகளின்
பணி சுமையை குறைக்க இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். ஏழை எளிய
மக்களுக்காக 50,000 மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி
உதவி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். புதிய ஆட்டோவிற்கு, 75
ஆயிரம் மானியம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலை இல்லா
மின்சாரம் 450 யூனிட் ஆகவும். விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச
மின்சாரம் 1,400 யூனிட் ஆகவும் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில்,
பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசியதாவது: இந்த தொகுதிக்கு
தேவையான, அனைத்து திட்டங்களும் மத்திய அரசு நிதி உதவியுடன்
முதன்மையான சட்டசபை தொகுதியாக மாற்றப்படும். தி.மு.க., ஆட்சியில்
கொலை, கொள்ளை, பாலியல், போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராயம்,
ரவுடிகள் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை
அமைதி பூங்காவாக மாற்ற, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,
முதல்வராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, கருணாகரனை வெற்றி
பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
பிரச்சாரத்தில் அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், பா.ஜ., மாநில மகளிர் துணைத் தலைவர் மீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சென்னை, பெங்களூரு நகரங்களில் கிடங்கு குத்தகை 58% அதிகரிப்பு
-
பஞ்சு உற்பத்தி 291 லட்சம் பேல்கள் உள்நாட்டு தேவை 328 லட்சம் பேல்கள் மத்திய ஜவுளித்துறை கணிப்பு
-
ஒடிஷாவில் 'செமி கண்டக்டர்' ஆலை
-
ஆயிரம் சந்தேகங்கள்: தெரியாதவரின் பணம் வங்கி கணக்குக்கு வந்தால் என்ன செய்யலாம்?
-
திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0
-
'ஏசி, மொபைல், பிரிஜ், டிவி ' விலை இம்மாத இறுதியில் உயர்கிறது