78 போலீசார் ஓட்டுப்பதிவு

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில், 288 ஓட்டுச்சாவடிகள், 317 ஓட்டுச்சாவடிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இங்கு பணிபுரியும் போலீசார் மற்றும் வெளிமாவட்ட போலீசார், அலுவலர்கள் நேற்று தபால் ஓட்டை பதிவு செய்தனர்.

விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில், விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட, 68 போலீசார், வெளிமாவட்ட போலீசார் 10 பேர் என, 78 போலீசாரும், பணி அலுவலர்கள், 41 உட்பட, 119 பேர் நேற்று தபால் ஓட்டை பதிவு செய்தனர்.

Advertisement